இந்திய பாஸ்போர்ட்டின் பலம் குறைந்தது!! 10 ஆண்டுகளில் வேறும் 5 நாடுகள் மட்டுமே இந்தியா மீது நம்பிக்கை!!!
Posted on
தற்போது விமான போக்குவரத்து சேவை பல நாடுகளில் காணப்படுகிறது. இந்த விமான சேவையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த அனைவருக்கும் பாஸ்போர்ட் தேவைப்படும். இந்தியாவின் பாஸ்போர்ட்டின் பலம் தற்போது மிகவும் குறைந்துள்ளது.
ஹன்லே பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் ஆனது 2011ஆம் ஆண்டு 78-வது இடத்தைப் பிடித்திருந்தது இந்தியா. அதன் பின்னர் ஐந்தாண்டுகளில் 2016-ஆம் ஆண்டில் 85 ஆவது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தது.
தற்போது 2021ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு 90வது இடம் கிடைத்துள்ளது என்றால் இந்தியாவின் பாஸ்போர்ட்டின் பலம் மிகவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற அடிப்படையில் இந்த பாஸ்போர்ட்டின் பலன் நிர்ணயம் அளிக்கப்படும். அதன்படி பார்த்தால் இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு மட்டுமே விசா எடுக்காமல் பயணம் செல்ல முடியும்.
இந்தப் பட்டியலில் முதலாவது இடத்தில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகள் உள்ளன. இந்த இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
இரண்டாவது இடத்தில் ஜெர்மனி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.இந்த இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட்டும் 190 நாடுகளுக்கு விசா தேவை இல்லாமல் செல்லலாம்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று வெறும் ஐந்து நாடுகள் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அதன்படி பார்த்தால் சீனாவுக்கு கடந்த பத்தாண்டுகளில் 39 நாடுகள் அனுமதி அளித்துள்ளது.
பிரேசிலுக்கு 30 நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ரஷ்யாவுக்கு 29 நாடுகள் அனுமதி அளித்துள்ளன. இதனால் 2021 ஆம் ஆண்டில் 90 ஆவது இடத்தினை இந்தியா, தஜிகிஸ்தான், புக்கினா பேசோ ஆகிய நாடுகள் உள்ளன.