ஈரான் படைகள் சுற்றி வளைத்த தென் கொரிய டேங்கர் கப்பல். |
ஈரான் ராணுவத் தளபதி காசின் சுலைமானியைக் கொன்று ஓராண்டு நிறைவடைந்த தினத்திற்கு மறுநாள் இந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. மேலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடியும் தறுவாயில் இதனை அறிவித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பதற்றங்கள் அதிகரிக்கிறது என்று கூறி டொனால்டு ட்ரம்ப் மத்திய கிழக்கில் விமானம் தாங்கிப் போர்க்கப்பலை அங்கு நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.20% தூய்மையாக்கத்துடன் யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்கி விட்டதாக சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஈரான் தெரிவித்துள்ளது.
திங்களன்று யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கையை தொடங்கி விட்டதாக ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் அலி ராபி அறிவித்தார்.
இந்நிலையில் தென் கொரிய டேங்கரை பறிமுதல் செய்து வைத்திருப்பதையும் யுரேனியம் செறிவூட்டலையும் அமெரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளது.பிடித்து வைக்கப்பட்ட தென் கொரிய டேங்கர் கப்பலைச் சுற்றி ஈரானின் புரட்சிப்படை படகுகள் சுற்றி வளைத்துள்ளன.
டேங்கர் இருக்கும் கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனே கப்பலை விடுவிக்கவும் தென் கொரியா ஈரானிடம் முறையிட்டுள்ளது.


Initially revealed: January 5, 2021